பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதி சுற்றி வளைப்பு ,இரண்டு தாய்லாந்து பெண்கள் கைது

 


உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பெரும் பணக்காரர்கள் வந்து செல்லும் கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடத்தில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்து இரண்டு அழகான தாய்லாந்து பெண்கள் உட்பட ஐவரை கைது செய்ததாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு செயலணி தெரிவித்துள்ளது.

ஏனைய சந்தேக நபர்களில் இலங்கையைச் சேர்ந்த அழகிய யுவதியும் முகாமையாளரும்  இந்த விபசார விடுதியை நடத்துவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். 

 கொழும்பு 3, கொள்ளுப்பிட்டியில் இரண்டு மாடிக் கட்டடம் ஒன்றில் விபசார நிலையம் நடத்தப்படுவதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப் படையின் பணிப்பாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் உதய குமாரவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காவல்துறை சார்ஜன்ட் ஜெயலால் கண்டுபிடித்த தகவலின் அடிப்படையில் கோட்டை நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் அனுமதியுடன் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டது.

 குறித்த இடத்தில் தங்கியிருந்து விபசாரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தாய்லாந்து இளம் பெண்கள் இருவரிடமும் கடவுச்சீட்டு கூட இல்லை என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இலங்கைப் பெண் சுமார் பத்து கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களை வைத்திருப்பவர் எனவும், அவருக்கு சொந்தமான மூன்று சொகுசு கார்கள் மற்றும் பிலியந்தலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மூன்று மாடி வீடு உள்ளது எனவும் காவல்துறை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.