தொல்பொருளுக்கு பொறுப்பான அமைச்சர் விதுர விக்கரம நாயக்க பணிப்பாளரை தவறான
பாதையில் நடத்தியவர் அத்தோடு தொல்பொருள் செயலணியில் பின் இருந்து நிதி
வழங்கி இராணுவ தளபதிகளை செயற்பட்ட மூல காரணமானவர். அமைச்சர் விதுர விக்கரம
நாயக்கா.
அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக்கவேண்டும். என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டு. ஊடக மையத்தில் (14) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் என்ற பெயரிலே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர்.
காலையில் கிரான், மாலையில் பட்டிப்பளை பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டம்
இந்த கூட்டங்களில் அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவில்லை. அபிவிருத்தி என்ற
பெயரிலே கடந்த 3 வருடங்களாக இந்த மாவட்டத்திலே எந்தொரு வேலைத் திட்டமும்
முன்னெடுக்கப்படவில்லை.
நடை பெறுகின்ற கூட்டங்களில் அதிகாரிகளை அச்சுறுத்துவதும் தங்களது நிகழ்ச்சி
நிரலுக்குள் வராத அதிகாரிகளை மோசமான வார்த்தைகளால் பேசுவது தான்
மாவட்டத்தில் சில வருடங்களாக நடக்கின்றது.
அதே வேளை பேசப்படும் ஒரே விடையத்தை மீண்டும் மீண்டும் பேசிக்
கொண்டிருக்கின்றோம். எதிர்கால தீர்வுவை பாராளுமன்ற உறுப்பினரான நான் முன்
வைத்தாலும் இதனை நடை முறைப்படுத்துவதற்கு எங்களுக்கு அதிகாரம்
வழங்கப்படவில்லை.
இருந்த போதும் கல்வி தொடர்பாக ஆசிரியர் பற்றாக்குறை சில வலையங்களில்
அதிகமான ஆசிரியர் இருக்கின்றமை சில வலயங்களில் இல்லை போன்ற பிரச்சனைகள்
இருக்கின்றது.
இவ்வாறு மாவட்டத்தில் அரசாங்கத்தின் கொள்கைகளை நடை முறைப் படுத்துவதற்காக
இருக்கும் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்கள் இவ்வாறான
விடயங்கள் பற்றி எந்த அக்கறையும் செலுத்தாமல் தீர்வை வழங்க வேண்டியவர்கள்.
கூட்டத்தில் அமைதியாக இருந்து கொண்டு அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு
அமைச்சு பதவிகள் பெற்று, சலுகைகளை மட்டும் அனுபவித்துக் கொண்டு தீர்வுகளை
காண்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் முன் வைக்க வேண்டியுள்ளது.
நாங்கள் இந்த கூட்டங்களுக்கு போகாவிட்டால் இந்த மாவட்டத்தின் அனைத்து
வளங்களையும் சூறையாடி பாலைவனமாக மாறியிருக்கும் எனவே பாதுகாவலராக
கூட்டத்திற்கு செல்ல வேண்டியள்ளது.