அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐக் கடந்துள்ளது.

 


அமெரிக்காவின், டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ள அனர்த்தத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை
100 ஐக் கடந்துள்ளது. 
 
உயிரிழந்தவர்களில், 27 சிறுமிகள் மற்றும் பணியாளர்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
இந்த அனர்த்தத்தில் பலர் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் நான்காவது நாளாகத் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.