மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர் விளையாட்டரங்கு இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .

 













மட்டக்களப்பு விவேகானந்தபுரம் ராமகிருஷ்ண மிஷன் சுவாமி விவேகானந்தர் பாலர் பாடசாலையில் சுவாமி ஜீவானந்தர் ஞாபகார்த்த பாலர்  விளையாட்டரங்கு இன்று (5) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது .

இலங்கை ராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி  அக்சராத்மானந்தா ஜீ மகராஜ் அதனை திறந்து வைத்தார் .

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் பொது முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜி மகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி இராஜேஸ்வரானந்தா ஜீ சுவாமி உமாதீசானந்தா ஜீ மற்றும்    மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிய முன்பிள்ளைப்பருவ அபிவிருத்தி உதவிக் கல்விப்பணிப்பாளர் திருமதி அனுரேகா விவேகானந்தன்  ஆகியோரும் கலந்து சிறப்பித்தார்கள்.

 முன்பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.