வீட்டு உரிமையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

 


 ‘உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்’ எனும் திட்டத்தின் கீழ், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்மூலமாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டு உரிமையாளர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பில்
இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, வவுணதீவு, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி ஆகிய நான்கு பிரதேச பிரதேச செயலகபிரிவுகளில், இரண்டாம் கட்டமாக 31 பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு, மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சந்திரகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
காசோலை வழங்கும் நிகழ்வில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்,
மாவட்ட அபிவிருத்தி குழு அலுவலக உத்தியோகத்தர், பயனாளிகள் கலந்து கொண்டனர்.