மின்சாரம் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் மனைவிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது .

 


மட்டக்களப்பு அமிர்தகழி பாடசாலை வீதியிலிள்ள வீடொன்றில் திருத்தப்பணிகளில் ஈடுபட்ட இருவர் மின்சாரம் தாக்கி கடந்த 14ம் திகதி உயிரிழந்தனர்.
25 வயதான இளைஞ்ஞரும் 2 பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய ஒருவரும் வீட்டின் கூரையைத்திருத்தும் போதே இருவரும் மின்சாரம் தாக்கி
உயிரிழந்தனர்.
உயிரிழந்த 36 வயதுடைய குடும்பஸ்தரின் வீட்டு நிலைமையை அறிந்த தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவன் தியாகேந்திரன் அவர்களின் ஆலோசனைக்கமைய பிள்ளைகளது கல்வி மற்றும் அவரினது வீட்டின் அடிப்படைச் செலவினை மேற்கொள்வதற்காக முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ஸ்ரீ லங்கா மீடியா போரத்தின் பணிப்பாளரும் நிதியத்தின் இனைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம்.பாரிஸ் அவர்களின் மூலம் உயிரிழந்தவரின் மனைவி,
பிள்ளைகளிடம் பணம் கையளிக்கப்பட்டது.