அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவன நிர்வாக குழுழுவினருடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கலந்துரையாடால் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

 


அதானி டிரான்ஸ்மிஷன் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அனில் சர்தானா மற்றும் திட்ட நிர்வாகக் குழுவுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர கலந்துரையாடால் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நேற்று (12) இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மன்னார் மற்றும் பூநகரியில் 500 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.