கல்முனையில் சிறப்பாக நடைபெற்ற உலக பாரிசவாத தினம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

 

















 






 





உலக பாரிசவாத தினம் (29.10.2025) மற்றும்மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தினை முன்னிட்டு கல்முனை  ஆதார வைத்திய சாலையின் தொற்றா நோய் தடுப்பு பிரிவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட நடைபவனி  நேற்று கல்முனையில் இடம்பெற்றது.

 இந்நிகழ்வானது வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கத்தின் தலைமையில் இடம்பெற்றது.

 வைத்தியசாலை முன்றலில்  ஆரம்பித்த நடைபவனி பிரதான வீதியினூடாக கல்முனை சந்தையை அடைந்து, பஸ் தரிப்பு நிலையத்தை அடைந்து, மீண்டும் வைத்தியசாலையை அடைந்தது.

 நிகழ்வின் போது உரையாற்றிய பணிப்பாளர் வைத்திய கலாநிதி சுகுணன் குணசிங்கம் 

 தொற்றா நோய் என்றால் என்ன, தொற்றா நோய் வராமல் எவ்வாறு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். பாரிசவாதம் எவ்வாறு ஏற்படுகின்றது, இதனை எவ்வாறு தடுக்க முடியும், மார்பக புற்றுநோய் வராமல் எவ்வாறு பாதுகாப்பது என்பன பற்றிய தெளிவான விளக்க உரையினை வழங்கியிருந்தார். இந்நிகழ்வின் போது வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் வைத்தியசாலையின் உத்யோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
 
 

( வி.ரி. சகாதேவராஜா)