கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமானின் அறிவுறுத்தலுக்கமைய, மாகாண சமூக சேவைகள் திணைக்களம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு
போன்றவை இணைந்து நடாத்திய நடமாடும் சேவை, மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளரின் வழிகாட்டுதலுக்கிணங்க இடம்பெற்ற நடமாடும் சேவையில்,
இரத்தப் பரிசோதனை, கண் பரிசோதனை, ஆயுர்வேத வைத்திய சேவை, சமூக சேவைகள்
திணைக்களத்தின் உதவி பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ் வழங்கல், சமுர்த்தி
வங்கி கொடுப்பனவுகள், பொது சன மாதாந்த உதவி கொடுப்பனவு, நோய் உதவி
கொடுப்பனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை வழங்கல் போன்ற பல்வேறு
சேவைகள் இடம்பெற்றன.
மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் சுதாகர், மாவட்ட சமுக சேவை உத்தியோகத்தர் அருள்மொழி உள்ளிட்ட அரச திணைக்கள அதிகாரிகளும்
இதில் கலந்து கொண்டிருந்தனர்.
பல நூற்றுக் கணக்கான மக்கள் இலவச சேவையினை பெற்றுக் கொண்டனர்.