இலங்கை போக்குவரத்து சபைக்கு 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம் .

 


இலங்கை போக்குவரத்து சபைக்கு 520 சாரதிகள் மற்றும் 170 நடத்துநர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச.வின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் வெற்றிடங்கள் காரணமாக பஸ் சேவையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பஸ் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.