ஒரு நாள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தகுதிகாண் போட்டிகளில்
பங்கேற்பதற்காக சிம்பாப்வே சென்ற இலங்கை அணிக்கு அந்நாட்டில் வழங்கப்பட்ட
விடுதி அறைகளில் பாஸ் இல்லாததால் சுமார் 3 மணி நேரம் ஹோட்டலில் தரையில்
அமர்ந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐசிசி தொடர் ஒன்றில் தேசிய அணி ஒன்றிற்கான இந்த கவனிப்பு தொடர்பில் இலங்கை
அணியின் சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை
மேற்கொண்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், இலங்கை அணியினர் மதியம் ஹோட்டலுக்கு சென்றதாகவும், இலங்கை
அணிக்கு முன்னதாக வந்த மற்றொரு தேசிய கிரிக்கெட் அணியை சோதனைக்கு
உட்படுத்திய காரணமாக இலங்கை தேசிய அணியின் சில வீரர்களுக்கான ´சோதனை´
தாமதமானதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், இலங்கை கிரிக்கெட், இது குறித்து ஹோட்டல் நிர்வாகத்திடம்
தெரிவித்தத்தை அடுத்து ஐ.சி.சி.யுடன் இணைந்து, குறுகிய காலத்திற்குள்
சிக்கலை சரிசெய்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.