ரீ.எல்.ஜவ்பர்கான்
மட்டக்களப்பு - கொக்கட்டிச் சோலையிலிருந்து முச்சக்கர வண்டி மூலம் காத்தான்குடி பிரதேசத்திற்கு 12,000 மில்லி லீற்றர் கசிப்பை கடத்திய மூன்று சந்தேக நபர்களை கர்பலா பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய போதை வஸ்த்து ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி எச்.எம்.சியாம் தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12000 மில்லி லீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.