ஜுலை மாதம் 1 ஆம் திகதி முதல் கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 


ஜுலை மாதம் 1 ஆம் திகதி முதல் பல்வேறு வர்த்தக வங்கிகள் தங்களது கடன் அட்டைகளுக்கான வட்டிவீதங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் மத்திய வங்கியின் நாணய சபை, கடன் மற்றும் வைப்பு கொள்கை வட்டிவீதங்களை குறைத்திருந்தது.

இதனை அடுத்து வங்கிகள் தங்களது வட்டி வீதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டிருந்தது.

எனினும் கடன்களுக்கான வட்டிவீதங்கள் தொடர்பாக இதுவரையில் தகவல் எவையும் வெளியாகவில்லை.