மறைந்த ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஸ்டிக்கப்பட்டது..





































(கல்லடி செய்தியாளர்)

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இனந்தெரியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின்
19வது நினைவுதினம்  இன்று புதன்கிழமை (31) மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்காக நிருமாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியில் அனுஸ்டிக்கப்பட்டது..

மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்டத் தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமரர் ஐயாத்துரை நடேசனின் உருவப் படத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான பா.அரியநேத்திரன், சிவில் சமூகத்தைச் சேர்ந்த வணபிதா எஸ்.ஜெகதாஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் ஆகியோர் மலர்மாலை அணிவித்ததுடன், நிகழ்வில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்களால் அகல் விளக்கேற்றப்பட்டு, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புக்களின் ஒன்றியத் தலைவர் எஸ்.சிவயோகநாதன், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள், பொது அமைப்புக்களின் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.