மட்டக்களப்பில் ஆரையம்பதியில் '' பரிதி'' தொழு நோய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.






 


























இலங்கையில் தொழுநோயாளர்கள் அதிகம் சிகிச்சை பெறும் நோயாளர்களில் அதிகமானவர்கள் உள்ள இரண்டாவது மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டம் என மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பில் இதுவரை  200 தொழுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் 
மட்டக்களப்பு மாவட்ட சுகாதார பிராந்திய சேவைகள் பணிப்பாளர் ஆர். முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுகார அமைச்சின்  சுகாதார, மக்கள் பிரிவன் பிரதி பணிப் பணிப்பார் பிரதம  அதிதியாக டொக்டர் எஸ்.எம். அர்னோல்ட் பங்கேற்று  பரிதி  சிகிச்சை நிலையத்தை  இன்று காலை  திறந்து வைத்தார் .

நிகழ்வில் விசேட தோல் வைத்திய நிபுணர் டொக்டர் தமிழ் வண்ணன் மற்றும்   மட்டக்களப்பு மாவட்ட தொழுநோய் கட்டுப்பாட்டுக்கு பொறுப்பான  வைத்திய அதிகாரி லுபோஜிதா கமல்ராஜ்,  'வைத்தியர்கள்  தாதிய உத்தியோகத்தவர்கள் பொது சுகாதார  பரிசோதகர்கள்   உள்ளிட்ட     பலரும் கலந்துகொண்டனர்.

 மட்டக்களப்பு பிராந்திய   சுகாதார  சேவை  பணிமனையின்  தொழுநோய் கட்டுப்பாட்டுக்கு பிரிவினரால்  பிரதம  அதிதியாக  கலந்து கொண்ட வைத்தியர்  எஸ்.எம். அர்னோல்ட்  அவர்களுக்கு   நினைவுப்பரிசு     வழங்கி  கௌரவிக்கப்பட்டார் .

 

EDITOR