அடிப்படை உரிமைகளுக்கு முரணானது .

 


பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துகளால் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அந்த சட்டமூலத்தை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளரின் கையொப்பங்களுடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை மீளாய்வு செய்வதற்காக விசேட குழுவொன்றை நியமித்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. 

சட்டமூலத்தின் சில சரத்துகள் நீதியை நிலைநாட்டும் முறைமையை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும் அது அடிப்படை உரிமைகளுக்கு முரணானது எனவும் குறித்த குழு கூறியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.