(கல்லடி செய்தியாளர்)
மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் இறுதி நாளான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை (04) தீமிதிப்பு இடம்பெற்றது.
இத்தீமிதிப்பின் போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த பல நூற்றுக்கணக்கான தேவாதிகள் மற்றும் ஆண், பெண் அடியவர்கள் தீமிதிப்பில் கலந்து கொண்டனர்.
இவ்வாலய உற்சவம் கடந்த புதன்கிழமை (29) கும்பம் வைத்தலுடன் ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.
.jpg)













































