வறுமைக்கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு.

 




















கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, கனடா கல்வி அமைப்பின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட அறம் அமைப்பின் ஒத்துளைப்புடன், யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் 1982ம் ஆண்டு உயர்தரப் பிரிவு மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களுக்கான 41 துவிச்சக்கர வண்டிகள் இன்று மட்டக்களப்பில் வைத்து வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

கனடா கல்வி அமைப்பின் கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கான இணைப்பாளர் சிரேஸ்ட இலங்கை நிருவாக  சேவை அதிகாரி  மா.தயாபரன் தலைமையில், மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில்,
வறுமைக்கோட்டில் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள்
வழங்கப்பட்டதுடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள மாணவர்களிற்காக 75 துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வலய கல்வி பணிப்பாளர்கள், யாழ் இந்து கல்லூரியின் 1982ம் ஆண்டு உயர் தர பழைய மாணவர்கள், பாடசாலை அதிபர்கள்,பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர் .