ஈரானின் புதிய ஆன்மீக தலைவரான மொஜ்தபா காமேனிக்கு ரஷ்யாவில் ரகசியமாக சிகிச்சை

 


ஈரானின் புதிய  ஆன்மீக தலைவரான மொஜ்தபா  காமேனியின் காலில் ஏற்பட்ட உபாதைக்கு சிகிச்சை பெறுவதற்கென விசேட விமானத்தில் அவர் ரஷ்யா சென்றுள்ளதாக அல்-ஜஸிரா மற்றும் பிரிட்டனின் ‘தி சன்’ பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டதென்பதில் தெளிவில்லாத நிலையிலும், ஏற்கெனவே நடத்தப்பட்ட தாக்குதலிலே, இந்த காயம்  ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.யுத்தத்தை ஆரம்பித்த தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் ஆன்மீகத் தலைவரான அலிகாமேனியுட்பட 48 பேர்  உயிரிழந்திருந்தனர். இந்தத் தாக்குதலில் இவர் மட்டுமே காயங்களுடன்

உயிர் தப்பியதாக நம்பப்படுகிறது. மத்தியகிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் மிக இரகசியமாக இவர் ரஷ்யாவுக்கு சென்றுள்ளதாக அந்த பத்திரிகைகள் தெரிவித்துள்ளன. இவரை ஏற்றிச் செல்வதற்கென ரஷ்ய இராணுவ விமானம் ஈரானுக்கு வந்துள்ளதையும் இந்தச் செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் ஈரானின் புதிய ஆன்மீக தலைவர்    அழைத்துச் செல்லப்பட்டதாகவும், புடினின் அதிகாரபூர்வ இல்லத்தில்  அவருக்கு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகவும் செய்திகள்  வௌியாகியுள்ளன.