வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவான வைற்றலின் நிதி அனுசரணையில் சமகாலப் பொருளாதார நெருக்கடியினால் மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலருணவுப் பொதிகள் இன்று (27) மட்டக்களப்பு அருவி பெண்கள் வலைமைப்பின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வெல்லாவெளி, செங்கலடி மற்றும் கிரான் பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட 50 பயனாளிகளுக்குத் தலா 10000/- பெறுமதியான பெறுமதியான உலருணவுப் பொதிகள் இதன்போது கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், அருவி பெண்கள் வலையமைப்பைச் சேர்ந்த அ.கிரிஜாலினி உட்பட வலையமைப்பின் பல அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.
.jpeg)

.jpeg)

.jpeg)


 



