கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் புதிய நிர்வாகம் போட்டியின்றி தெரிவு

 
 




 

 
( வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின்  2026/2027 ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவானது நேற்று  (18) புதன்கிழமை கல்முனையில் இடம் பெற்றது. 

இந் நிர்வாகத்தில் ஒரு சில சிறிய மாற்றங்களுடன் 2025/2026 அதே நிர்வாகம் 2026/2027 ஆண்டுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய மீண்டும் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி ஆரிக்கா ஷாரிக் காரியப்பர்,
பொதுச்செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி ஏஜி. பிரேம் நவாத் ,
பொருளாளராக சட்டத்தரணி சி.ஐ.சஞ்ஜித் அஹமட் ,
உப தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி நடராஜா சிவரஞ்சித் ,
உபசெயலாளர்களாக  சட்டத்தரணி எம் .ஜே.ஜாவீட் நிஷாட் , புண்ணியநாதன் துவாரகா 
கணக்காய்வாளராக சட்டத்தரணி எம் எவ் எம்.சுஹால்ஸ் 
நூலகராக சட்டத்தரணி சௌஃவி இஸ்மாயில் 
 ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

கல்முனை சட்டத்தரணிகள் 
சங்கத்தின் பிரதிநிதிகளாக 

சிரேஷ்ட சட்டத்தரணிகளான 
எம் எஸ் எம்.ஜெமீல், 
ஏ.எல்.நதீர் ,
ஏ.எம்.பதிர்யுதின், 
எம்.எஸ்.ரஷாக் ,
எம்.ஷாரிக் காரியப்பர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களாக 
சட்டத்தரணிகளான 
ஏ.நிதான்சன்,பாத்திமா சுஜா,
எம்.எச்.சௌத் முகமட், எல்.ஏ.கே.மடோனா ஆகியோரும்
,ல் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

2026/2027 ஆண்டுக்கான தெரிவு போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டமை சிறப்பம்சமாகும்.