மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியின் தாய் மொழி தின நிகழ்வு கல்லூரி அதிபர் S.தருமுதாஸ் தலைமையில் கல்லூரி ஒன்று கூடல் மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம் பெற்றது .
(சர்வதேச தாய் மொழித்தினம் பெப்ரவரி 21-ஆம் திகதியாகும் , அன்றையநாளில் பாடசாலை விடுமுறை என்பதால் 2026.02.13 அன்று முன்னெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது )
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ் பிரிவு பிரதிப்பணிப்பாளர் கலாநிதி S. மோசஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார் .
ஆரம்ப நிகழ்வாக அதிதிக்கு மாலை அணிவிக்கப்பட்டு மண்டபத்துக்கு வரவேற்கப்பட்டார் .
தமிழர் பாரம்பரிய முறைப்படி மங்கல விளக்கேற்றல் , இறைவணக்கம் மற்றும் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
உப அதிபர் திருமதி N. சிவநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார் .
மாணவிகள் தமிழ் மொழியின் பழைமை, அழகு மற்றும் சிறப்பை உணர்த்தும் செம்மொழி பாடலை பாடி அரங்கத்தினை மகிழ்வித்தனர் .
தொடர்ந்து மாணவி A.விக்க்ஷனாவின் கவிதை இடம் பெற்றது.
ஆசிரியை சஹானா அவர்கள் இலக்கிய விமர்சனம் பற்றி சொற்பொழிவாற்றினார் .
திருமதி T. சுதாகரன் ஆசிரியை உரை வழங்கினார் .
மாணவிகளால் சிவனின் திருவிளையாடல் என்ற புராண
நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டது .
தொடர்ந்து பிரதான அதிதி கலாநிதி S. மோசஸ் அவர்களின் உரை இடம் பெற்றது .
ஆசிரியர் திருமதி S.விக்னேஸ்வரன் நன்றியுரையாற்றினார் .
தமிழ் மொழி வாழ்த்தோடு தாய் மொழி தின நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது .
EDITOR
.




