கிழக்கிலங்கையின் மட்டக்களப்பு
மாவட்டத்தில் வவுணதீவு பிரதேசத்திற்குட்பட்ட கரவெட்டி_நெல்லிச்சேனை கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஆதிலிங்கேஸ்வரர் ஆலயமானது
இலங்கைத் திருநாட்டில் 02ஆவது பெரிய சிவன் சிலையைக் கொண்ட பெருமையும் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் மகா பெரியலிங்கத்தின் மகத்துவமும் ஒன்றாக விளங்கும் ஆலயமாக காணப்படுகிறது.
இப் புண்ணிய பூமியில் வீற்றிருக்கின்ற ஆதிலிங்கேஸ்வர பெருமானுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விஞ்சாபன பெருவிழாவானது மிகச்சிறப்பான முறையில் இடம்பெற காத்திருக்கின்றது.
அந்தவகையில்
*13.02.2026 (வெள்ளிகிழமை) #கிரியைகள்
#ஆரம்பம்
* 14.02.2026 (சனிக்கிழமை)
#எண்ணெய்க்காப்பு
* 15.02.2026 ( ஞாயிற்றுக்கிழமை)
#மகாகும்பாபிசேகம்
என்பன போன்ற இறை நிகழ்வுகள் இடம்பெற இருக்கின்றன.
#எண்ணெய்_சாத்துவதின்_மகிமை
#எண்ணெய் பூசி ஈசனை காக்கும் நாள்,
எண்ணங்களைத் தூய்மை செய்யும் நாள்!
உடல் நோய் அகலும்,
உள்ள நோய் விலகும்,
ஒளியாய் மாறும் சிவ அருள்!
எண்ணெய்க் காப்பு காணும் கண்களுக்கு,
எண்ணாத நன்மை ஈசன் தருவான்! 🔱
இந்தப் புனித திருவிழாவில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு
இலங்கையின் 02 ஆவது பெரிய சிவன் சிலையையும் மூலஸ்தானமகாலிங்கத்தையும் தரிசித்து
ஆதிலிங்கேஸ்வரர் அருளைப் பெற்று
வீடேறுமாறு அன்புடன் ஆலய பரிபாலன சபையினர் .










