வரதன்
அரிசியின் விலை அதிகரிக்கும் ஆனால் அது மக்களுக்கு சுமையாக மாறிவிடும் எனவே விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தினால் அவர்களுக்கான மானியத் தொகை வழங்கப்பட உள்ளது- பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு
விவசாய அமைச்சர் தலைமையில் விவசாய சங்கங்களுடன் ஒரு கலந்துரையாடல் இடம் பெற்றது
அவர்களின் கோரிக்கைக்கு அமைவாக நெல்லுக்கான நிர்ணய விலையை 120 ரூபாவாக என தீர்மானிக்கப்பட்டுள்ளது
இதேவேளை அவர்களுக்கு மானியத்தின் ஊடாக மேலதிக நிவாரண தொகைகளை வழங்கவும் முடிவு எட்டப்பட்டுள்ளது அவர்கள் விலையை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்தாலும்
இறுதியில் பாவனையாளர் மக்களே நெல்லின் விலையை அதிகரிக்கும் போது அரிசியின் விலையும் அதிகரிக்கும் அவை மக்களுக்கான சுமையாகவே மாறிவிடும்
எனவே விலையை அவ்வாறு வைத்து விவசாயிகளின் நஷ்டத்திற்கு ஏற்ப அவர்களுக்கான மானியத் தொகை வழங்கப்பட உள்ளது
கடந்த கால ஆட்சியிலே அனைத்து துறைகளிலும் ஊழல் காணப்பட்டது அவை தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
எமது அரசாங்க காலத்தில் எதுவித ஊழல்களும் இடம்பெற வாய்ப்பில்லை எதிர்காலத்தில் சரியாக வடிவமைக்கப்பட்ட ஊழல் இல்லாத அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளது
தற்போது நமது அரசாங்கத்தில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் மக்களுக்கான அதிர்ச்சி திட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என
பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து தெரிவித்தார்





