காத்திரமான உரையாடல்களுடன் நடந்தேறிய மட்டக்களப்புப் பொது நூலக வாசகர் வட்டத்தின் ஆகஸ்ட் மாதத்திற்கான நூலறிமுக நிகழ்ச்சி

 















மட்டக்களப்பு பொது நூலக வாசகர் வட்டம் நடத்தும் மாதாந்த நூலறிமுக நிகழ்ச்சித் தொடரின் ஆகஸ்ட் மாதத்திற்கான நிகழ்ச்சி இன்று 30.08.2026 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணி தொடக்கம் 05:30 வரை மட்டக்களப்புப் பொது நூலக மண்டபத்தில், வாசகர் வட்டத்தின் தலைவர் ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு த. யுவராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
வந்தாறுமூலையைச் சேர்ந்த ஓய்வுநிலை அதிபர் திரு கு. சண்முகம் அவர்கள் எழுதியுள்ள “ களுவன்கேணி வேடுவப் பரம்பரையினரின் வழக்காறுகள்” என்னும் நூலை கிழக்குப்பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் விரிவுரையாளரான திருமதி பிரசாந்தி இளங்கோ அவர்கள் சிறப்பாக அறிமுகம் செய்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து கிழக்கில் வாழும் முதற்குடிகளான வேடுவர்கள் தொடர்பாகக் காத்திரமான உரையாடல்கள் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில் வாசகர் வட்டத்தின் அங்கத்தவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆய்வறிவாளர்கள், களுவன்கேணியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனப்பலரும் பங்குபற்றியிருந்தார்கள்.
து. கௌரீஸ்வரன்,
30.08.2026.