வரதன்
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வளையத்திற்குப்பட்ட செட்டிபாளையம் மகா வித்தியாலயத்தில் இன்று காலை ஆரம்பமான கல்வி பொதுத் தராதர சாதாரண பரிட்சைக்கு ஆலயங்களில் சென்று இறை ஆசீர்வாதத்தின் பின்னர் பெற்றோர்களுடன் பரிட்சை நிலையத்திற்கு சீரற்ற கால நிலைக்கு மத்தியிலும் வருகை தந்த போது
பரீட்சை எழுத விருத்த மாணவர்களை பரீட்சை நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் உரிய நேரத்திற்கு பரீட்சை நிலையத்திற்கு உள் அனுமதிக்காததால் மாணவர்களும் பெற்றோர்களும் கொட்டும் மழையிலும் காத்திருந்த சம்பவம் இன்று பதிவாகியது
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை தொடக்கம் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் காரணத்தினால் பரீட்சை எழுதும் மாணவர்கள் பலத்த அசோகரியங்களை எதிர்நோக்கி இருந்தனர்
இருந்தபோதிலும் கல்வி அமைச்சின் அறிவுறுத்தல் அமைவாக உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு சமூகம் தந்த மாணவர்கள் பரிட்சைக்கு பொறுப்பான அதிகாரிகள் தேவையான முன்னாய்த்த நடவடிக்கைகளை நேர காலத்துடன் முடிக்காத காரணத்தினால் மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலை பரீட்சை மண்டபத்திற்கு செல்ல முடியாமல் காத்திருந்தனர்











