சந்திரன் பூமியை விட்டு விலகி செல்வது ஏன் ?

 


தற்போது சந்திரன் பூமியிலிருந்து ஆண்டுக்கு 3.8 சென்றிமீட்டர் தூரம் விலகிச்செல்வதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

நாசாவின் கூற்றுப்படி, சந்திரன் பூமியிலிருந்து மெதுவாக ஆண்டுக்கு 3.8 செமீ தூரம் விலகி செல்வதாக இங்கிலாந்தை சேர்ந்த நியூஸ் இணையதளமொன்று குறிப்பிட்டுள்ளது.

 'மிலன்கோவிச் சுழற்சிகள்' சந்திரன் பூமியிலிருந்து விலகிச்செல்வது இதற்கான காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 பூமியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு அதன் காலநிலையை பாதிப்பதுடன், இந்த சுழற்சிகளும் அவற்றின் அதிர்வெண்களும் சந்திரனுக்கும், பூமிக்கும் இடையிலான தூரத்தை தீர்மானிக்கின்றன.

இதற்கமைய, விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, சந்திரன் அதன் தற்போதைய தூரத்தை விட சுமார் 2.46 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு 60,000 கிமீ நெருக்கமாக இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..