அரச ஊழியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி .

 


உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையிலுள்ள அரச சேவையாளர்கள் தேர்தல் நடைபெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது. தேர்தல் நிபந்தனைகளுக்குட்பட்ட வகையிலே, சகலரும் தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தனர். தற்போது, தேர்தல் இல்லையென்று குறிப்பிட வில்லை. தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதென்றே குறிப்பிடுவதாக, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலில் போட் டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் சென்றுள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில் மேற்கண்டவாறு அவர், குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச சேவையாளர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின், அவர்கள் மூன்று மாத காலம் சம்பளமில்லாத விடுமுறை என்ற அடிப்படையில் சேவையிலிருந்து இடை விலக வேண்டும்.

 அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதற்கமைய எதிர்வரும் மார்ச் மாதம் (09) உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டது.தவிர்க்க முடியாத காரணங்களால் மார்ச் மாதம் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறான பின்னணியில், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரை சம்பளமில்லாத விடுமுறையில் சென்றோர்,அரச சேவையில் ஈடுபட முடியாது என்றார்.