உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார்.

 


தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று (26) நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ​போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, நிவித்திகலை பிரதேச சபைக்கு போட்டியிடும் நிமல் அமரசிறி (வயது 61) என்பவரே மரணமடைந்துள்ளார்.