40 ஏதிலிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 


 தெற்கு இத்தாலியின் கடலோர நகரமான க்ரோடோனுக்கு அருகில் படகொன்று கடலில் மூழ்கியதில் ஒரு சிறு குழந்தை உட்பட சுமார் 40 ஏதிலிகள் நீரில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுவரையில் 28 பேரின் உடல்களை மீட்டுள்ளதாகவும், மேலும் மூன்று பேர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டதைக் கண்டதாகவும் மீட்புப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இவர்கள் எங்கிருந்து பயணித்தவர்கள் என்ற விடயம் இன்னும் தெரியவரவில்லை.

அதிக பயணிகள் ஏற்றப்பட்டதன் காரணமாக குறித்த  படகு கவிழ்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.