மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவிகளுக்கான பாராட்டு விழா.

 


 வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த, மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலை மாணவிகளுக்கான
பாராட்டு விழா இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு புனித சிசிலியா தேசிய பாடசாலையில் 2022 ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 116 மாணவர்களில், 115 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளை பெற்று சித்தி அடைந்துள்ளதுடன்
48 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்றுள்ளதாக பாடசாலை அதிபர் அருட் சகோதரி நிதாஞ்சலி தெரிவித்தார்.
பாடசாலை அதிபர் அருட் சகோதரி நிதாஞ்சலி தலைமையில், ஆசிரியர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளைப் பாராட்டிக் கௌரவிக்கும்
நிகழ்வில் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார், உதவி கல்வி பணிப்பாளர் ஹரணியா சுதாகரன் உட்பட பாடசாலை ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு
உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.