மட்டக்களப்பில் வடக்கு, கிழக்கு மாபெரும் சைக்கிளோட்ட சமர்.

 









மட்டக்களப்பு மாவட்ட சைக்கிளோட்ட சங்கத்தின் ஏற்பாட்டில் மாவட்ட சைக்கிள் அமைப்பின் தலைவர் ஐ. பிரேம்நாத் தலைமையில் மாபெரும் சைக்கிள் ஓட்டப்போட்டி ஏறாவூர் செங்கலடி பிரதேசத்தில் அண்மையில் (22) இடம்பெற்றது.
இப்போட்டியில் ஆரம்பிப்பாளராகவும் பிரதம அதிதியாகவும் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் கே. தனபால சுந்தரம் கலந்துகொண்டார்.
வடக்கு, கிழக்கு மாபெரும் சைக்கிளோட்ட சமரில் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு போன்ற மாவட்ட வீரர்கள் இதில் பங்கு பற்றினர்..
போட்டியில் முதலாவது இடத்தினை மட்டக்களப்பை சேர்ந்த ஐ. ராஜ்குமாரும் இரண்டாம் இடத்தினை வவுனியாவை சேர்ந்த டபிள்யு. பி. எல். மதுசங்க வும்
மூன்றாம் இடத்தினை யாழ்ப்பாணத்தினை சேர்ந்த பி. கிரிஸ்ணாவும் பெற்று கொண்டார்கள்
இவர்களுக்கு பெறுமதியான பணபரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி ஸ்ரீநாத், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி. ஈஸ்பரன், ஏறாவூர் உதவி பொலிஸ் பொறுப்பதிகாரி அஷ்ரப் காரியப்பர், செங்கலடி விளையாட்டு உத்தியோகத்தர் சங்கீதா ஆகியோருடன் பலர் பங்குபற்றினர்.