களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பொங்கல் விழா

 
 






களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பொங்கல் விழா நிகழ்வானது பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் மற்றும் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலில் இன்று (31) காலை 9.00 மணிக்கு செவ்வாய்கிழமை பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.
சூரியனுக்கு நன்றி செலுத்தும் திருநாளான பொங்கல் விழா செயலக உத்தியோகத்தர்களினால் ஏற்பாடு செய்து கிளை ரீதியாக 15 வகையான பொங்கல் பானைகள் ஏற்றப்பட்டு பல்வேறு வகையான கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் கிளைகள் ரீதியாக இடம்பெற்ற போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற கிளைகளுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.