மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச கலாசார பேரவை, கலாசார அதிகாரசபை பொதுக்கூட்டம் - 2026


















மண்முனைப்பற்று பிரதேச கலாசார பேரவை, கலாசார அதிகாரசபை பொதுக்கூட்டமானது14.03.2026 ஆம் திகதி மு்ப 10.15 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் கலாசார பேரவை, அதிகார சபை உபதலைவரும் உதவிபிரதேச செயலாளருமாகிய திரு.கி. இளங்குமுதன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது. இதில் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் திரு.வி.தவேந்திரன், கலாசார உத்தியோகத்தர்,  கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், பேரவை மற்றும் அதிகாரசபை செயலாளர்கள், உபசெயலாளர்கள், பொருளாளர்கள், ஆலோசகர்கள், உறுப்பினர்கள் மற்றும் பிரதேச கலைஞர்கள் என 100 க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வில் கலாசார உத்தியோகத்தரின் வரவேற்புரை, உதவிபிரதேச செயலாளரின் தலைமையுரையினை தொடர்ந்து கலாசார பேரவை, அதிகாரசபை பற்றிய தெளிவூட்டல்களும் நிர்வாக கட்டமைப்பு பற்றிய விளக்கமும் உரிய உத்தியோகத்தர்களால்  முன்வைக்கப்பட்டது. பின் உதவிபிரதேச செயலாளர் அவர்களால் இவ்வமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் பற்றியும் விளக்கி ஆராயப்பட்டது.
தொடர்ந்து பேரவை, அதிகாரசபை நிருவாக தெரிவுகள் இடம்பெற்றது. பின் சில கலை கலாசார விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டு கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தரின் நன்றியுரையுடன் இனிதே முடிவடைந்தது.