இலங்கையின் முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷ ஈரானின் தெஹ்ரானில் நடைபெற்ற செல்வாக்கு உள்ள பெண்களுக்கான முதலாவது சர்வதேச காங்கிரஸில் பங்கேற்றார்.
புர்கினாபாசோ, கிர்கிஸ்தான், செர்பியா, கினியா, நைஜர், நைஜீரியா, சிரியா, துர்க்மெனிஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாட்டுத் தலைவர்களின் பாரியார்கள், அமைச்சர்கள், துணைத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பெண் விருந்தினர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் ஷிரந்தி ராஜபக்சவும் அதிதியாக கலந்து கொண்டார்.
செல்வாக்கு உள்ள பெண்களுக்கான மாநாடு இந்த ஆண்டு முதல் முறையாக தேசிய மற்றும் சர்வதேச அளவில் நடைபெற்றது.
இதன் தேசிய அளவிலான நிகழ்வு ஜனவரி 17ஆம் திகதியும், சர்வதேச அளவில் கடந்த 20ஆம் திகதியும் இடம்பெற்றன.
செல்வாக்கு உள்ள பெண்களைப் பாராட்டவும், அவர்களுக்கு ஆதரவளித்து அவர்கள் வளர உதவவும், அவர்களின் படைப்பாற்றல் மற்றும் யோசனைகளை மேம்படுத்தவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அறிவியல், ஆராய்ச்சி, புத்தாக்கம், பொருளாதாரம், சுகாதாரம், கலை, புகைப்படம் எடுத்தல், ஓவியம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல், சட்டம், ஊடகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் மாநாட்டில் பங்கேற்றனர்.





