முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் உள்ளுர் கோழிப்பண்ணை தொழில் வீழ்ச்சியடையும்.

 



முட்டை இறக்குமதிக்கு இடையூறு விளைவிப்பவர்கள் தொடர்பில் விரிவான அறிக்கையை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

முட்டை இறக்குமதியைத் தடுக்க சில தரப்பினர் முயற்சிப்பதாக வர்த்தக அமைச்சர் அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் முட்டைகளை இறக்குமதி செய்தால் கோழிப்பண்ணையாளர்களுடன் இணைந்து பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் சிசிர பியசிறி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பல மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில் முட்டைகளை இறக்குமதி செய்ய ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முட்டை இறக்குமதி செய்யப்பட்டால் உள்ளுர் கோழிப்பண்ணை தொழில் வீழ்ச்சியடையும் என வைத்தியர் பியசிறி தெரிவித்தார்.