ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் பாரம்பரிய கலாசார அம்சங்களுடன் இடம் பெற்ற பொங்கல் நிகழ்வு.









மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் தைப்பொங்கல் விழா வெகுவிமர்சையாக கொடுவாமடு காளி கோவிலில் இடம்பெற்றது.
ஏறாவூர் பற்று பிரதேச செயலாலரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக உதவிப் பிரதேச செயலாளர் திருமதி. நிருபா பிருந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு அதிதிகள் மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது
இப்பொங்கல் விழாவின் போது
பாரம்பரிய முறைப்படி புதிர் எடுத்து வரப்பட்டு நெல் குற்றி பொங்கல் பொங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்விற்கு கணக்காளர் திருமதி. டிலானி ரேவதன் , நிருவாக உத்தியோகத்தர் ந.கோமதி மற்றும் பிரதேச உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.