உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. இதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின்படி 663,618. ரூபாவாக பதிவாகியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றது. 24 கரட் தங்கப் பவுண் ஒன்று தற்போது நாட்டில் 187,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 171,700 ரூபாவாகவும் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 163,900 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகி உள்ளது.