பாரம்பரிய உணவின் மதிப்பை மீண்டும் நினைவூட்டிய பிரபல நடிகை றுத்றா அமிர்தரெத்தினம்.











இன்று மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகம் மற்றும் குருமண்வெளி ஸ்ரீ மகாவிஸ்ணு–ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய அறநெறிப் பாடசாலையுடன் இணைந்து நடத்தப்பட்ட பாரம்பரிய உணவுச் சான்றிதழ் வழங்கும் விழா ஓம் பராசக்தி அன்னதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை வகித்தவர் வண. சிவஸ்ரீ வ.கு. யோகராசா குருக்கள் (JP) – அறநெறிப் பாடசாலை ஸ்தாபகர் (அதிபர்).
பிரதம அதிதியாக திரு. உ. உதயயஸ்ரீதர், மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வின் சிறப்பம்சமாக, நடிகையும் சமூக விழிப்புணர்வாளருமான RuthraSeva Foundation நிறுவனர் றுத்றா அமிர்தரெத்தினம் அவர்கள்
“பாரம்பரிய உணவுமுறையும் ஆரோக்கியமான வாழ்வும்” எனும் தலைப்பில் விழிப்புணர்வு சொற்பொழிவு வழங்கி, பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றார்.

அவர் நவீன வாழ்க்கை முறையில் மறைந்து வரும் இயற்கை உணவுப் பழக்கங்களின் அவசியத்தையும், பாரம்பரிய உணவின் மருத்துவ நன்மைகளையும் வலியுறுத்தினார்.
அவரது ஆழமான உரை மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊக்கமூட்டுவதாக அமைந்து, பாரம்பரிய உணவின் மதிப்பை மீண்டும் நினைவூட்டும் வகையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதனுடன், பாரம்பரிய உணவுவகைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், அவை பங்கேற்பாளர்களுக்கு பரிமாறப்பட்டன.
இவ்விழா பாரம்பரிய உணவின் சுவையையும் அதன் பண்பாட்டுப் பெருமையையும் அனைவருக்கும் அனுபவிக்கச் செய்தது.

பிரதேச செயலாளர் திரு. உ. உதயயஸ்ரீதர் அவர்கள் தனது பிரதம அதிதியுரையில்
றுத்றா அமிர்தரெத்தினம் அவர்களின் விழிப்புணர்வு சொற்பொழிவை பாராட்டியதுடன்,
உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் அவர்கள் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

விழாவின் நிறைவில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இடம்பெற்றது.