மட்டக்களப்பு ஆரையம்பதி நலன்புரி பாலர் பாடசாலை சிறார்களுக்கு மட்டக்களப்பு Jaz-Reel Kid's Garden Pre-School சமூகத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் தலைமையில் இடம் பெற்றது
இங்கு ஆரம்ப நிகழ்வாக அதிதிகள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர் . மங்கல விளக்கேற்றல், இறைவணக்கம், வரவேற்புரை ஆகிய சம்பிரதாய நிகழ்வுகளும் இடம்பெற்றன.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன் பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி. அனுரேகா விவேகானந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பு அதிதிகளாக ஆரையம்பதி நவரெட்னராசா வித்தியாலய அதிபர் முரளிதரன் சதீஸ்குமார் மற்றும் பிரதேச கிராம சேவகர் உத்தியோகத்தர் பரிதிராஜ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
மேலும் Jaz-Reel Kid's Garden Pre-School பாலர் பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் நலன்புரி பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் சிறார்களும் கலந்து சிறப்பித்தனர்.
அதிதிகள் உரை இடம் பெற்றதை தொடர்ந்து அதிதிகளால் சிறார்களுக்கு Jaz-Reel Kid's Garden Pre-School சமூகத்தால் அன்பளிப்பு செய்யப்பட்ட கற்றல் உபகரணங்கள் நலன்புரி பாலர் பாடசாலை சிறார்களுக்கு வழங்கப்பட்டன.
மேலும் Jaz-Reel Kid's Garden Pre-School சமூகத்தால் காலை ஆகாரமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
Jaz-Reel Kid's Garden Pre-School சமூகத்தால் வழங்கப்பட்ட கற்றல் உபகரணங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் ஒழுங்கு படுத்துதலில் இடம் பெற்றது என்பது குறிப்பிடப்பட வேண்டிய தொன்றாகும்
பால்ய வயதிலேயே மாணவர்களிடையே பரஸ்பரம் உதவும் குணத்தை ஊக்கப்படுத்துதல் , மாணவர்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துதல்,
வசதியுடன் இருக்கும் மாணவர்கள் இல்லாத மாணவர்களுக்கு உதவுவது மனிதப்பண்பு, பண்பு என்பது பக்குவத்தின் விளைவாகும் . பசியோடு இருக்கும் மாணவனுக்கு உங்கள் ஆகாரத்தை வழங்கி பகிர்ந்து உண்ணுங்கள்.
கல்வியோடு மனித நேயத்தையும் தலைமை பண்பாக கொண்டு மாணவர்கள் வாழவேண்டும் என்ற எண்ணக்கருவுக்கு அமைவாக செயற்படும் உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களின் சேவை இங்கு பாராட்டப்பட வேண்டியதொன்றாகும்
செய்தி ஆசிரியர்































































