மட்டக்களப்பு பழைய கல்முனை வீதி கல்லடி சாயி ஒழுங்கையில்
அமையப்பெற்ற குளத்தினால் சுற்றி உள்ள குடியிருப்பாளர்களுக்கு
பலவருடங்களாக பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றது .
மேலும்
மாரி காலத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் இக்குளமானது நிரம்பி
பாதையெங்கும் பரவி வெள்ளமாக காணப்படுகின்றமையால் இவ்வீதியில் பயணம் செல்ல
முடியாதுள்ளது. பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மட்டுமன்றி வேலைக்கு
செல்பவர்கள் மோட்டார் சைக்கிளில் பயணிக்ககூட முடியாதுள்ளது. அன்றாடம்
வேலைக்கு செல்பவர்களுக்கு தனியாக சிறு குழந்தைகளை விட்டுச்செல்வது கூட
இக்குளமிருப்பது மிகுந்த பேராபத்தாக உள்ளது.
இதுமட்டுமல்லாது கோடை
காலங்களில் இரவு வேளைகளில் வேறு இடங்களில் இருந்து கழிவு மூட்டைகளை கொண்டு
கொட்டுகின்றனர். இதனால் இவ்விடத்தில் துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்பு
மற்றும் ஈக்களின் பெருக்கமும் அதிகரிப்பதுடன் டெங்கு நோய்க்கு ஆளாகி
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளமையும்
குறிப்பிடத்தக்கது. மேலும் இக்குளத்தில் சிறிது நீர் நிரம்பியவுடன் இரவு
நேரத்தில் மீன் பிடிப்பதாக கூறி இனம் தெரியாத நபர்கள் சமூக விரோத
செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர் .
இவ்வாறான விடயங்களினை
கருத்திற் கொண்டு இக்குளத்தினை மூடுவதற்கோ அல்லது பாதுகாப்பு வேலி அமைத்து
தரல் வேறு ஏதாவது மக்கள் பயன்பாட்டிற்குரியதாக மாற்றுவதற்கு சிறுவர்
பூங்கா, அல்லது நூலகம் போன்ற ஏதாவது ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கையினை
மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும்
மட்டக்களப்பு மாநகர சபைக்கு கல்லடி சாயி ஒழுங்கையில் வாழும்
குடியிருப்பாளர்கள் வேண்டுகோள் விடுக்குகின்றனர் .
EDITOR




