உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

 

 











 

உள்ளக நீதிப்பொறிமுறை வேண்டாம்; சர்வதேச விசாரணையே வேண்டும்" – மட்டக்களப்பில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்!

​மட்டக்களப்பு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக இன்று (04.07.2026) திகதி காந்தி பூங்கா முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

​உள்ளக நீதிப்பொறிமுறைக்கு எதிர்ப்பு: சிங்கள அரசு மற்றும் இராணுவத்திற்கு ஆதரவான, தங்களை ஏமாற்றுகின்ற எந்தவொரு உள்ளக நீதிப்பொறிமுறையும் தங்களுக்குத் தேவையில்லை எனப் போராட்டக்காரர்கள் இதன் போது தெரிவித்தனர்.

​சர்வதேச விசாரணைக்கான கோரிக்கையினை முன்வைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களுக்கு நம்பகமான நீதி கிடைக்க வேண்டுமாயின், தமது பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து ஒரு சர்வதேச விசாரணை மட்டுமே நடத்தப்பட வேண்டும் என இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.

​போராட்டத்தின் போது, காணாமலாக்கப்பட்ட தங்களது பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் அடையாள அட்டைகளை கைகளில் ஏந்தியவாறு தாய்மார்கள் மற்றும் உறவினர்கள் கண்ணீருடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உருப்பினர் ஞா.சிறிநேசன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவுகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன், சர்வதேச விசாரனை வேண்டும், எங்கே எங்கே உறவுகள் எங்கே போன்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மகிந்த அரசின் போதே கொலைகள் இடம்பெற்றது, இதன் போது அவர்களுடன் சேர்ந்து செயற்பட்டவர் பிள்ளையான் என இதன் போது பாராளுமன்ற உருப்பினர் ஞா.சிறிநேசன் கருத்து தெரிவித்திருந்தார்.