காரைதீவு இளம் வைத்தியர் செல்வி.பிரணவசோதி காலமானார்.







காரைதீவைச்  சேர்ந்த இளம் மருத்துவர் செல்வி செல்வராஜா பிரணவசோதி [ MBBS ]( வயது 31)  இன்று(21) சனிக்கிழமை சுகவீனம் காரணமாக இறைபதமடைந்தார்.

ஓய்வு நிலை பொலிஸ் பரிசோதகர் செல்வராஜா நாகஜோதி தம்பதியரின் புதல்வியான இவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி  வந்தவர்
 
 கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி(intern)   பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவராவார்.

அன்னாரின் இறுதி கிரியை நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மட்டக்களப்பில் நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
 
 
( வி.ரி. சகாதேவராஜா)