சேவை நலன் பாராட்டு நிகழ்வும் ,கௌரவிப்பும்.

கடந்த 30 வருடங்கள் நீர்ப்பாசன திணைக்களத்தில் பல உயர்நிலை அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி எஸ் கணேசலிங்கம் அவர்களின்

கடந்த 30 வருடங்கள் நீர்ப்பாசன திணைக்களத்தில் பல உயர்நிலை அதிகாரியாக பணியாற்றி ஒய்வு பெற்று செல்லும் கிழக்குமாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி எஸ் கணேசலிங்கம் அவர்களின் சேவை நலன் பாராட்டு நிகழ்வும் ,கௌரவிப்பும் கிழக்குமாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்
ஜி.சுஜிதரன் தலைமையில் நடைபெற்றது .

கிழக்குமாகாண நீர்ப்பாசன திணைக்கள உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு திராய்மடுவில் பிரதேசத்தில் உள்ள மாகாண நீர்ப்பாசன திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்ற நிகழ்வில் பணிப்பாளரின் பாரியாரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளருமான கலாரஞ்சனி கணேசலிங்கம் , அவரது மகள் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர் .

இந்நிகழ்வில் திணைக்கள உத்தியோகத்தர்களின் வாழ்த்துப்பா பாராட்டு வாழ்த்துரைகளும் , பணிப்பாளருக்கான பொன்னாடை போர்த்தி கௌரவிப்பும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

கிழக்குமாகாண பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர்