அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்த ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 


 

அண்மையில் அலரிமாளிகையில் ஜனாதிபதியுடன் செல்ஃபி எடுத்த ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பிரதிநிதி ஒருவர் பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற விருந்திற்கு இந்த நபர் வந்து செல்ஃபி எடுத்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து அமைச்சர்கள் புகார் தெரிவித்ததையடுத்து அந்த நபர் உரிய புகைப்படத்தை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு குறித்த நபர் ஊடகப்பிரிவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.