மட்டக்களப்பு திரௌபதை அம்மன் சமூக நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் புளியந்தீவு பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு இந்து மகளிர் மன்ற கட்டிடத்தில் இடம்பெற்றது.
ஏர் நிலம் அமைப்பின் உதவியுடன் குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
திரௌபதை அம்மன் சமூக நற்பணி மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் வி.லவசாந் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஏர் நிலம் அமைப்பின் பிரதிநிதி வதனா, ஆனைப்பந்தி சித்தி விக்னேஸ்வரர் ஆலய தலைவர் சி.மங்களராஜன் மற்றும் திரௌபதை அம்மன் சமூக நற்பணி மன்றத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது புளியந்தீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு தொகை கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டிருந்தன.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த தனபாலன் ஜாதவன் மற்றும்ஜெகதீஸ்வரன் அபிநயா ஆகியோர் இன்றைய திருமண நிகழ்வைச் சிறப்பிக்கும் முகமாக குறித்த கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஏர் நிலம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)


 
 




 
 
 
 
.jpeg) 
.jpeg)