ஒரு குடும்பத்திற்கு பெண்பிள்ளை எவ்வளவு முக்கியம்?

 

ஒரு குடும்பத்திற்கு பெண் குழந்தை மிகவும் முக்கியமானது. காரணம், பெண்ணை பெற்று வளர்க்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை. பெண்ணை பெற்றால் மட்டுமே பெண்ணின் பெருமையும் அருமையும் புரியும்.

குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்தால், மஹாலட்சுமி பிறந்துவிட்டால் என்பார்கள். அதேபோல் பெண் குழந்தைக்கு காதுக் குத்துதல், வயதுக்கு வந்தால் தாய்மாமன் சீர் வரிசை, என பல சிறப்பு அம்சங்கள் ஏராளம்.

பெண் குழந்தைகள் எதை பேசினாலும் எது செய்தாலும் கவிதை தான். அதுவும் பெண் குழந்தைகள் தனக்கு தானே அலங்காரம் செய்யும் அழகு இருக்கே கொள்ளை அழகு!! பெண்ணை பெற்ற தந்தைக்கு கோடி புண்ணியம் ஏன் என்றால், கன்னிகாதானம் செய்யும் செய்பவர்களுக்கு மறுபிறவி இல்லை என்பது நம்பிக்கை!!

அதேபோல் பெண்ணை பெற்ற தந்தைக்கு, அந்த பெண்ணே இரண்டாவது தாய் தான்!! தந்தையின் அதிகாரத்தை மகளின் அதிகாரங்கள் எப்போதும் வெல்லும்!! ஒவ்வாத நாளும் மகளின் ஆசைகளை நிறைவேற்றுவது தான் ஒவ்வொரு தந்தையின் கடமையாகும்!!

எவ்வளவு துன்பங்கள் வாழ்க்கையில் இருந்தாலும், வீட்டில் உள்ள பெண் குழந்தைகளின் அன்பும், புன் சிரிப்பும் நம் கவலையை மறக்க செய்யும்!!

ஆனந்த யாழை மீட்டுகிறாய் - அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்!
அன்பெனும் குடையை நீட்டுகிறாய் - அதில்
ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்!

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை!
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மழையின் அழகோ தாங்கவில்லை!
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி!
இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி!

நா. முத்துகுமார் எழுதிய இந்த அழகான வரிகள் போதும் பெண் குழந்தையின் பெருமையை சொல்ல!!