மத்தியஸ்த சபையின் கடமைகளும் பொறுப்புக்களும் தொடர்பான செயலமர்வு.

 






 

நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் எம். எம். எச். நஜிமுதீனால் ஒருங்கிணைப்புச் செய்யப்பட்ட ஒரு நாள் செயலமர்வு  மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவானது சிறு சண்டை, குடும்பப் பிணக்கு போன்ற சிறுகுற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட தவறாளர்களுக்கு தீர்ப்பு வழங்கும்.
இச்செயலமர்வில் மத்தியஸ்த சபையின் கடமைகள், பொறுப்புக்கள் மற்றும் சபைக்கு பிணக்குகளை முன்வைத்தல் என்பன தொடர்பாக அம்பாறை மட்டக்களப்பு மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர் எம். ஐ. முஹம்மது ஆஸாத் மற்றும் நன்னடத்தை தவறாளர் கட்டளைச் சட்டம் குறித்து ஓய்வுபெற்ற சிரேஷ்ட நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ. ஏ. உதுமாலெப்பை ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு தெளிவுகளை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் நன்னடத்தை உறுப்பினர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் என மட்டக்களப்பு மாவட்டத்தில் பணியாற்றும் 65 உத்தியோத்தர்கள் பங்கேற்றனர்.
நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் நாடு பூராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது