ஆழ்கடல் குறுந்திரைப்பட வெளியீடு .

 



கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரிவினால் தயாரிக்கப்பட்ட ஆழ்கடல் குறுந்திரைப்படம் நேற்று முந்தினம் (28) பாண்டிருப்பு கலாசார மத்திய நிலையத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது.
பிரதேச செயலாளர் திரு.தி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக வைத்திய கலாநிதி இரா.முரளீஸ்வரன், சிரேஸ்ட எழுத்தாளர் திரு.எஸ்.உமா வரதராஜன் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதிகளாக நிருவாக உத்தியோகத்தர் திரு.எம்.ஜீவராஜ், நிருவாக கிராம உத்தியோகத்தர் திரு.ஏ.அமலதாசன், சமுர்த்தி தலமைப்பீட முகாமையாளர் திரு.கே.இதயராஜா, மாவட்ட செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரிவின் அபிவிரித்தி உத்தியோகத்தர் ஜனாப்.ஏ.எம்.பர்ஸான் மற்றும் கிஷா பில்ம் மேக்கர்ஸ் இயக்குனர் செல்வன்.வீ.டிலோஜன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
கிஷா பில்ம் மேக்கர்ஸ் இயக்கியிருந்த “ஆழ்கடல்” குறுந்திரைப்படம் அதிகளவான பார்வையாளர்களின் பெருவரவேற்புக்கு மத்தியில் வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.