இராஜாங்க அமைச்சரினால் பல மில்லியன் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு.

 

 















கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவத ற்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (30) மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில்   இடம்பெற்றது.

"கமசமக பிலிசந்தர" எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கிராமத்துடன் உரையாடல் மூலம் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 3 ஆம் கட்டமாக வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.   

வட்டார ரீதியில் 4 மில்லியனையும், கிராம சேவையாளர் பிரிவுகளிற்கு 3 மில்லியன் பெறுமதியான நிதியில் இருந்து வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழக்கி வைக்கப்பட்டது.

கொடிய கொவிற் தொற்றின் பாதிப்பு மற்றும் ரஷ்யா உக்ரைன் போரின் தாக்கத்தினாலும் எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சவாலாக உள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சா்  விவசாயிகள் எதிர் கொண்ட உரப் பிரச்சினைகளுக்கு  திர்வுகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இம் முறை சிறந்த அறுவடையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து இருப்பதால் அந்நிய செலவாணியை அதிகரிக்க வாய்ப்பு எற்பட்டுள்ளதாகவும் இதன்போது  தெரிவித்தார்.  

அத்தோடு மாவட்ட மக்களின் கல்வி செயற்பாட்டை  அதிகரிப்பதற்கு  கலைக்களஞ்சியமாக விளங்கும்  நூலகத்தினை மிக விரைவில் அமைத்து மக்கள் பாவனைக்கு வழங்குவதற்கு அயராது முயற்சி செய்து வருவதாகவும் இதன்போது மேலும் தெரிவித்தார்.

பயனாளிகளுடன் கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் சுயதொழில் முயற்ச்சியில் ஈடுபட்டு தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது இராஜாங்க அமைச்சரினால் பெறுமதியான மின்கருவிகள், தொனிகள், கைத்தறி நெசவு உபகரணங்கள், குளிர்சாதன பெட்டிகள், தையல் இயந்திரங்கள் என வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பெறுமதிவாய்ந்த பல்வேறுபட்ட சாதனங்கள் வழக்கிவைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் போது மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்சன், மாநகரசபை  உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின்  தனிப்பட்ட செயளாலர் த.தஜிவரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் உயரதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.